“விஜய் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார்?” – பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கேள்வி…!

முதல்-அமைச்சர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார் என்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா வினவியுள்ளார்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா உரையாற்றினர்.
அப்போது முகமூடி அணிந்து எங்கேயும் செல்ல மாட்டோம் வெளிப்படையான ஆட்சி வழங்குவோம் என முதல்-அமைச்சர் விஜய் அன்று சொன்னார். அப்படி இருக்கையில், விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார் என்று வினவினார்.
குதிரை பேரம் நடந்ததாக ஏராளமானோர் கூறியிருக்கும் நிலையில் அது குறித்து பேச வேண்டும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான நிகழ்வு தற்போது நடந்துள்ளது.
இந்தச் செயல் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நிச்சயம் நீங்கள் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்று வினவினார்.
இந்த ஆட்சி ஒரு நேர்மையான ஆட்சியாகவும், அறிவியல் பூர்வமான ஆட்சியாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *