ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி…..!

Advertisements
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 56 ஆவது போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 56 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ்  ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதில், சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 61 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 50 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *