
மத்திய அரசின் திட்டங்கள்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் வாகனப் பயண நிகிழ்ச்சியில், பாரதப் பிரதமர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்வழங்கினார்.
மத்திய அரசின் திட்டங்கள்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா“ நாடு தழுவிய விழிப்புணர்வு வாகனப் பயண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாகத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று(08-01-2024) நடைபெற்றது. மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் வரவேற்புரை வழங்கப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அதன் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சர் சாய். J. சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அரசுச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர் வல்லவன், அரசுதுறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகிழ்ச்சியில், பாரதப் பிரதமர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் துணைநிலை ஆளுநர் வழங்கினார். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியைத் துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


