TN Rains Impact: ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் மாற்றம்!

கடலூரில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில்  தற்காலிக கூடாரம் சரிந்து விழுந்ததால் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை சாலையில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி மாறுபாடு காரணமாகக் கடலூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலாட் விடுத்து இருந்தது இந்த நிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில் மாலை முதல் அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது குறிப்பாக இன்று காலை 8:30 மணிவரை அதிகபட்சமாகச் சிதம்பரத்தில் 228.8 mm, புவனகிரியில் 189mm, சேத்தியாத்தோப்பில் 155mm மழையளவு பதிவானது மாவட்டத்தில் சராசரியாக 94.28mm, மாவட்டம் முழுவதும் 2356.50mm மழை பதிவானது. இதன் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடத்தில் தண்ணீர் தேங்கியது.

மேலும் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கு அக்னி பாத் திட்டத்தின் கீழ் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்ததால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் கீழே விழுந்து சேதம் ஆனதால் உடற் தகுதி தேர்வு தற்காலிகமாகத் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை சாலையில் உடல் தகுதி தேர்வு மாற்றப்பட்டு அங்கு நடைபெற்றதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *