Medical Association General Assembly: தனி பாதுகாப்பு சட்டம் இயற்றத் தீர்மானம்!

Advertisements

மதுரையில் C& D மெடிக்கல் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வணிகர் பாதுகாப்புமற்றும் நலனுக்குத் தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கத்தில் C& Dமெடிக்கல் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம்நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையிலும் பொருளாளர் செண்பகராஜ் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாகச் சங்கத்தின் பொதுசெயலாளர் சரவணன் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் ஜீயர்பாபு கலந்து கொண்டுசிறுபுறையாற்றி பரிசுகள் வழங்கினார்.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டுவரை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது.இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

பின்னர் தீர்மானம்குறித்து செய்தியாளர் சந்திப்பில் பொதுச் செயலாளர் சரவணன் கூறியது:-

மாமூல் தர மறுத்த மருந்துக் கடைக்காரரை வெட்டிப் படுகொலை செய்திட்ட சமூக விரோதிகளை இந்தப் பொதுக்குழு வண்மையாகச் கண்டிக்கிறது. மேலும் இதற்காக வணிகர் பாதுகாப்பு மற்றும் நலனுக்குத் தனி சட்டம் இயற்றவேண்டுமென் இந்தப் பொதுக்குழு வலியுறுத்திகிறது.மருந்துகள் ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து முழுமையாகத் தடை செய்திட வேண்டும்.

GST யில் மருந்துகளுக்கு ஒரே விதமாக 5 சதவீதம் மட்டும் விதித்திட வேண்டுமென இந்தப் பொதுக்குழு வலியுறுத்திகிறது.விற்பனை பில்களில் இரண்டு வகையான வழிமுறைகளை மாற்றியமைத்து ஒரே மாதிரியான விற்பனை யில் பராமரிப்பதற்கு வழிவகை செய்திட வேண்டுமென இந்தப் பொதுக்குழு வலியுறுத்திகிறது எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *