தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வேல்முருகன் ஆலோசனை!!

Advertisements

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் அவரது தொண்டர்களை அரசியல்படுத்த வேண்டும் என்றும், அதன்பிறகு பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைப் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதைக் கடுமையாக விமர்சித்தார்.

பாஜக கூட்டத்தில் கூட இது போன்று கட்டுப்பாடின்றித் தொண்டர்கள் நடந்துகொள்வதில்லை என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

ரோடு ஷோவையே தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்றும், அதற்கு முதலமைச்சரே எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *