எடப்பாடி பழனிச்சாமிக்குத் தமிழக அமைச்சர் ரகுபதி வினா..!

Advertisements

அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜக தான் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைக் கழற்றிவிட்டார் என்று தமிழக அமைச்சர் ரகுபதி வினவியுள்ளார்.

பெரியார் பிறந்த நாளையொட்டிப் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் நடுவழியிலேயே விட்டுப் போகிறவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார்.

விஜய்க்கு வரும் கூட்டத்தை வைத்து அவருக்கு வாக்குகள் வரும் என்று கூற முடியாது என்றும், திரைப்பட நடிகர் என்கிற கவர்ச்சியில் அவருக்குக் கூட்டம் சேர்வதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதால் தான் அவருக்குக் கெடுபிடிகள் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *