அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை.!

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை திருவப்பூரில் அதிமுக சார்பில் அண்ணாவின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்ததால், அந்தத் திட்டத்தை திமுக முடக்கி வைத்துள்ளதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *