Advertisements

தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையால் தான் நமது கட்சி தோற்றுப் போய்விட்டது என அவர் மீது காரசாரமாக குற்றம் சாட்டி பேசி இருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் . தமிழக பாஜகவில் மட்டுமல்ல டெல்லி மேல் இடத்திலும் இந்த விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார் . இதன் பின்னர் அவரது சார்பில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு விருந்து நடைபெற்றது . இந்த விருந்தை தொடர்ந்து தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த தேர்தலில் தோல்விக்கு காரணம் அண்ணாமலை என்பதை நேரடியாக குறிப்பிடாமல் நிர்மலா சீதாராமன் பேசியிருந்த பேச்சு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இதற்கிடையே முக்கிய நிகழ்வான இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை வரவில்லை அவர் தனது வீட்டிலேயே இருந்தார் வேண்டுமென்றே அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மீது அண்ணாமலை கடும் கோபத்தில் இருக்கிறார் தேர்தலில் தோல்வி என்பது சாதாரணமானது இதற்கு காரணமாக ஒருவரை மட்டும் குறிப்பிடுவது நியாயமற்றது என அவர் பேசி உள்ளார் . ஏற்கனவே நைனார் நாகேந்திரன் அண்ணாமலை இடையே திரை மறைவில் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையை கண்டித்திருக்கும் நிலையில் அவர் நைனார் நாகேந்திரன் ஆதரவாக குரல் கொடுக்கிறார். என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
Advertisements

