Illegal Relationship: சுடுகாட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள்!

Advertisements

சுடுகாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியைத் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் கோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்தது. இந்நிலையில், அன்றைய தினமே குழந்தை மற்றும் கணவர் தூங்கிய நிலையில் மனைவி யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலனை தேடி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், இருவரும்  அந்தக் கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.  கணவர் திடீரென எழுந்து பார்த்தபோது மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது மனைவியைத் தேடி  சுடுகாட்டின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது முனல் சத்தம் கேட்டதை அங்குச் சென்று பார்த்தபோது கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அங்குப் பிணத்தில் எரிந்து கொண்டிருந்த தீக் கட்டை ஒன்றை எடுத்து, உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள்மீது வீசியுள்ளார். இதனையடுத்து அரைகுறை ஆடையுடன் அலறியடித்துக்கொண்டு கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டான். ஆனால் நேபால் சிங்கின் மனைவி புடவையில் தீப்பற்றி எரிந்ததால் தீக்காயங்களுடன் துடித்த நிலையில் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இச்சம்பவம் தொடர்பாக நேபால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *