“எதற்காகவும் என்னை பிரபலப்படுத்த வேண்டாம்” – அஜித்குமார்

“கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள் என்னை பிரபலப்படுத்த வேண்டாம். இந்திய கார் ரேஸ் வீரர்களுக்கு நீங்கள் (தனது ரசிகர்கள்) ஆதரவளிக்க வேண்டும்” என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் ஜிடி4 ஐரோப்பியன் கார் ரேஸ் பந்தயம் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்ற அஜித்குமாரை சந்தித்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களிடம் பேசிய அஜித், கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள் என்றும் தன்னை பிரபலப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள் என்ற அஜித்குமார், இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக கஷ்டப்படுகிறார்கள் என்றும் அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை என்றும் கூறினார்.

. இதனிடையே, 6 முறை கிராண்ட் பிரிக்ஸ் வென்ற இத்தாலி ஜாம்பவான் ரிக்கார்டோ பேட்ரேஸை அஜித்குமார் சந்தித்து பேசினார். நுர்பர்க்ரிங் ரேசிங் களத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *