இறக்கும் வரை தமிழ் உணர்வு அழியாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

தமிழர்களின் தனித்துவமான குணம் சுயமரியாதை உணர்வாகும், இதனை எவரும் கெடுக்க முயற்சிக்க வேண்டாம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்ந்தும் நிலவுகிறது.

திராவிட இயக்கத்திற்கு எந்த மொழியோடு பகை இல்லை; தமிழ் மற்றும் பிற மொழிகளை எதிரியாகக் கருதுவதில்லை, பிற மொழிகள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்போது அதை எப்போதும் அனுமதிக்கவில்லை.

இந்தியை நீங்கள் கட்டாயமாக்குவதற்கு எதிராக இருக்கிறோம். வஞ்சகத்தை எதிர்க்கிறோம்; வளமான தமிழ்நாட்டை பாதுகாப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *