Advertisements

கடலூர் சாவடி அருகே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் கடலூர் சாவடி என்ற இடத்தின் அருகே சென்றப் போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கடலூரைச் சேர்ந்த என்எல்சி ஊழியர் அரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சதீஷ், பிரகாஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர், காரை இயக்கி வந்த கிருஷ்ணராஜை கடலூர் புதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisements



