
விஜயகாந்த் தன்னுடைய மகன்களின் திருமணத்தைக் கண் குளிர பார்க்க வேண்டும் என ஆசை பட்ட நிலையில், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்துள்ளார்.
1980 மற்றும் 1990-களில் தமிழ் சினிமாவில், அதிரடி ஆக்ஷன் நாயகனாகக் கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்று, திரையுலகில் நுழைந்து நடிப்பிலும், தயாரிப்பிலும் உச்சத்தை தொட்ட, இந்தப் புரட்சி நாயகன் அரசியலிலும் அதிரடியாக நுழைந்து தன்னுடைய மாஸை ஜெயலலிதா முன்பு வெளிப்படுத்தியவர். மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்புடாமல் கூறும் விஜயகாந்த், எதிர்கட்சியாகவும் செயல்பட்டவர்.
கடந்த சில வருடங்களாகவே… உடல்நலமின்றி தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த், நேற்று சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும், இன்று வீடு திரும்புவாரென மருத்துவமனை தரப்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் தொடர்ந்து விஜயகாந்த் சிகிச்சையில் இருப்பாரெனத் தெரிவிக்கப்பட்டது. இப்படி அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தபோது, தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் இன்று அதிகாலை விஜயகாந்த் உயிர் பிரிந்ததாக அதிகார பூர்வ தகவல் வெளியானது.
விஜயகாந்த் மறைவால், தற்போது ஒட்டு மொத்த தமிழகமே கண்ணீரில் ஸ்தம்பித்து போய் நிற்கும் நிலையில்… விஜயகாந்த்தின் மகன்களால் நிறைவேறாமல் போன அவரின் ஆசைபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகிலும், அரசியலிலும் விஜயகாந்த் பல சாதனைகள் செய்திருந்தாலும்… தன்னுடைய குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்க எப்போதும் மறந்தது இல்லை. அதே போல் தன்னுடைய இரண்டு மகன்கள்மீதும் அலாதியான பாசம் கொண்டவர். இவரின் இரு மகன்களும் திருமண வயதில் இருக்கும் நிலையில், கடைசி வரை ஒரு மகனின் திருமணத்தைக் கூடக் கண் குளிர பார்க்கமுடியவில்லையே என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கு 2019 டிசம்பர் மாதம், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்திகா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை.
இதுகுறித்து ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பேச்சுகள் அடிப்பட்டபோது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தான் திருமணத்தில் தாமதம் ஆவதாகக் கூறப்பட்டது. மேலும் மோடியின் தலைமையில், திருமணம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் கொரோனாவிற்கு பின்னரும் விஜய் பிரபாகரன் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஏராளமான ஏழை ஜோடிகளும், தன்னுடைய தொண்டர்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ள விஜயகாந்த்… தன்னுடைய சொந்த பிள்ளைகள் ஒருவரின் திருமணத்தைக் கூடக் கண்களில் காணாமல் நிரந்தரமாகக் கண் மூடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



