டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது..!

தில்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் திறம்பட எதிர்கொண்டு செயலாற்றி கொண்டிருக்கும் திமுகவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இடம் பெயர்ந்தவர்கள் 66 லட்சம் பேரை நீக்கியுள்ள நிலையில் அதில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் களத்துக்கே வரவில்லை என்றும் அதனால் தான், நாம் சந்தேகப்படும்படியாக உள்ளது என்றார். இதை தொடர்ந்து, ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட படிவம் – 6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கூறினார். மேலும்,  தில்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *