2023 Asian Games: சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய அணி!

Advertisements

ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி சுற்று லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரை இந்திய அணி வீழ்த்தியது.

நீச்சல் போட்டியில் 4*100 மெட்லே ரிலே பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-2, 6-1 என்ற செட்கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறினார்.துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரமிதா, பன்வார் ஆகியோர் கொண்ட கலப்பு அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதிபெற்றது. எனினும் இதில் கொரிய அணியிடம் 18-20 என்ற கணக்கில் தோல்வி அடைந்து பதக்கம் பெறும் பறிகொடுத்தது.
வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி, சீன வீராங்கனையிடம் தோற்று காலிறுதியிலிருந்து வெளியேறினார்.

வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி காலிறுதிக்கு தகுதி ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் வாள் வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி காலிறு சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். குருப் பிரிவில் நடந்த 6 போட்டிகளிலும் வென்ற நிலையில் காலிறுதி சுற்றுக்குப் பவானி தேவி முன்னேறினார்.
ஸ்குவாஷ் பிரிவில் இந்திய பெண்கள் அணி 3-0 பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா ஹாங்சோவ், ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 3-வது நாள் முடிவில் சீனா 39 தங்கம், 21 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. தென்கொரியா 10 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், ஜப்பான் 5 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலம் என 31 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியா (2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) 11 பதக்கத்துடன் 6-வது இடத்தில் இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *