
மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சல பிரதேச மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர் என்றும் வளர்ச்சிக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா,அருணாச்சல பிரதேச மக்களுக்கு நன்றித் தெரிவித்தார்.


