Tamil Nadu Rains:8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

Advertisements

சென்னை: நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (ஜூன் 24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஜூன் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஜூன் 25): நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் ஜூன் 28ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *