Madurai: இரத்தக்கசிவை நிறுத்திய மருத்துவர்கள்

Advertisements

இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுமிக்கு, மதுரை மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர்கள் பயாலஜிக்கல் தெரபி கொடுத்து ரத்தக்கசிவை நிறுத்திச் சாதனை படைத்தனர்.

இரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுமி, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் சிகிச்சை துறைத்தலைவர் விஜய்ஆனந்த், அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் செல்வ முத்துக்குமரன், செந்தில்குமார், ஜெபர்லின் சினேகா, கவுதம் குன்ச்சா ஆகியோர் பங்கேற்று, சிறுமிக்கு,  ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங் மூலம் பயாலஜிக்கல் தெரபி கொடுத்து ரத்தக்கசிவை நிறுத்தினர்.

இது தொடர்பாக, நரம்பியல் சிகிச்சைத் துறையின் முதுநிலை மருத்துவர் நரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிறுமிக்கு, ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங் எனப்படும், அதிநவீன மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், அடலிமுமாப் என்ற உயிரியல் மருந்தைச் செலுத்தி, அரிப்பு மற்றும் வீக்கத்தைச் சரிசெய்து, ரத்தத் தட்டுகள் நிலைப்படுத்தப்பட்டது எனவும், இச்சிகிச்சை தொடங்கியதிலிருந்தே, நோயாளிக்கு ரத்தக்கசிவு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *