Bangladesh Violence : வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவிட வேண்டும் ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Advertisements
வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு உதவிட வேண்டும் என, முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில், தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் சிக்கி தவிப்பதாகவும், அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அவர்களுக்கு உதவிட வேண்டும் எனவும், முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *