எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன்..!

எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தொண்டர்களின் கருத்தைப் எதிரொலிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5ஆம் நாள் செய்தியாளர்களிடம் மனந்திறந்து பேச உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றுக் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அதிமுக தொண்டர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற செங்கோட்டையனிடம் செப்டம்பர் 5ஆம் தேதி செய்தியாளர் சந்திப்புக் குறித்து வினா எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், தொண்டர்களின் கருத்தைத் தான் எதிரொலிக்கப் பேவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே செப்டம்பர் ஐந்தாம் நாள் கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக அவரது ஆதரவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்தியபாமா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *