நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு சேவை வரி ஆலோசனைக் கூட்டம்..!

Advertisements

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு சேவை வரி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சரக்கு சேவை வரிகளை மாற்றியமைப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை நடத்தி முடிவெடுக்கும்.

அதன்படி இன்று 56ஆவது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் நிதித்துறைச் செயலர், மாநில முதலமைச்சர்கள், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஒவ்வொரு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தின் சிறப்பு உற்பத்திப் பொருட்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அது குறித்துப் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *