வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்னதான் பிரச்சனை?

Advertisements

வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் இன்றைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்று, வீர தீர சூரன் , சித்தா படத்தின் இயக்குநர் அருண் குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம், மார்ச் 27ஆம் தேதியான இன்று வெளியாக இருந்ததை ஒட்டி, இந்த படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடித்திருக்கும் படம், வீர தீர சூரன் பாகம் 2. தமிழ் திரையுலகில் முதலில் இரண்டாம் பாகம் வெளியாகி விட்டு, அதன் பிறகு பாகம் 1 வெளியாவது அரிதாகத்தான் நடக்கும். அந்த வகையில், புது முயற்சியாக வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருந்தது. இதற்காக, படக்குழுவினர் இசை வெளியீட்டு விழாவை நடத்தி பெரிய அளவில் ப்ரமாேஷன்களையும் செய்தனர். படத்தின் வேலைப்பாடுகளையும் மிகவும் மும்மரமாக செய்து கொண்டிருந்தது , ஆனால், கடைசியில் ரிலீஸ் தேதியில் இந்த படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது.

வீர தீர சூரன் படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்த பிரச்சனைதான் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இந்த வழக்கினை B4U மீடியா தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரனை, தொடங்குவதற்கு முன்னர் காலை 9 மணி காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த படத்தை தயாரித்திருக்கும் ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று, படத்தின் அனைத்து ஆவணங்களையும் 40 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *