
வீட்டில் செய்யவேண்டியவை :
இனி கோடை காலம் தான் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் இப்போதில் இருந்தே அதிகமாகி விட்டது , ஆதலால் பெண்கள் அனவைரும் வெளியே செல்ல வெயில் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆகவே எப்படி நம்முடைய சருமப்பகுதிகளை பாதுகாக்கலாம் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. பப்பாளி மற்றும் ஆப்பிளை பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, முதுகு என்று தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி விடுங்கள். சருமத்துக்குப் புத்துணர்ச்சியும், பளபளப்பான தோற்றம் மற்றும் பளிச் நிறமும் கிடைக்கும்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் பால் ஆடையில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிஷம் கழித்து வாஷ் பண்ணி விடுங்கள். * உடம்பில் அங்கங்கே கருந்திட்டுகள் இருந்தால், ஓட்ஸை வேக வைத்து, பாலுடன் கலந்து, திக்கான பேஸ்ட்டாக ரெடி செய்துகொள்ளுங்கள். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். கருந்திட்டுகள் மங்கலாக ஆரம்பிக்கும் .
உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அரிசி மாவு அல்லது கடலை மாவில் தயிர், கஸ்தூரி மஞ்சள் கலந்து அதை முகம் மற்றும் உடல் முழுக்கத் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு வட்ட வட்டமாகத் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்தாலே சருமம் வழுவழுவென இருக்கும். இதற்குப் பதில் நலங்கு மாவைக்கூட டிரை பண்ணலாம். இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
பார்லரில் செய்ய வேண்டியவை:
வெயிலில் செல்கிற பெண்களுக்கு இருக்கிற ஒரு பிரச்னை சீரற்ற சரும நிறம். கன்னம் பளிச்சென்று இருக்கும். ஆனால், நெற்றி, கழுத்து, மூக்கு நுனி பகுதிகள் அனைத்தும் கறுப்பாக இருக்கும். இதுதான் சீரற்ற சரும நிறம். இதற்கு, டி டேன் சிகிச்சையை பார்லரில் செய்துகொண்டால், முகம், கழுத்து, முதுகு எல்லாம் ஒரே நிறத்தில் இருக்கும். ஃப்ரூட் ஃபேஷியல், க்ளோ ஃபேஷியல் என விருப்பமான ஃபேஷியலைச் செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வறண்ட சருமம் உள்ளவர்கள் கோல்டு ஃபேஷியலையும், எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்கள் டைமண்டு ஃபேஷியலையும் செய்துகொள்ளலாம். முத்து ஃபேஷியல் எல்லா வகை சருமத்துக்கும் பொருந்தும்.
இப்போது டிரெண்ட் ஜூவல் ஃபேஷியல்தான். தங்கம், வைரம், பிளாட்டினம், பெரி டாட் ஸ்டோன் ஆகியவற்றின் சின்னச் சின்ன துகள்கள் சேர்க்கப்பட்ட க்ரீமால் ஃபேஷியல் செய்வோம். இரண்டு நாள் கழித்து முகம் ஜொலி ஜொலிக்கும். மெனிக்யூர், பெடிக்யூர் இரண்டையும் பார்லரில் மட்டுமே செய்துகொள்ளுங்கள். கைக்கு டி டேன் தெரபி செய்துகொண்டால், மெஹந்தி வைத்தால் பளிச்சென்று தெரியும். உதட்டுக்கு மேலே இருக்கிற முடிகளைக் கல்யாணத்துக்கு முதல் நாள் வேக்ஸிங் மூலமாகவோ அல்லது த்ரெடிங் மூலமாகவோ ரிமூவ் செய்யாதீர்கள்.
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது அனைத்துமே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் , வாரத்தில் ஒருமுறையாவது வீட்டில் இருந்து செய்யக்கூடியவை அனைத்தும் செய்து பாருங்கள் , உங்களுக்கு நல்ல தீர்வினை அது தரும்.
