“சுப்பன்” திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு.!

மதுரையில் டூ தேனி பட கிரியேட்டர் குழுவின் சுப்பன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், கோச்சடை சாந்தி சதன் வளாகத்தில், குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில், ரொட்டேரியன் ஆனந்தமுருகனின் ஸ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுப்பன் திரைப்படம் உருவாகிவுள்ளது.

இந்த, படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக வேளாண் உணவு வர்த்தக மையத்தின் நிறுவனர் ரத்தினவேலு கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்.

தொடர்ந்து, இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையில் உருவான பாடலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆனந்தமுருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர், இயக்குனர் குகநேசன் சோனைமுத்து பேசியப் போது, சுப்பன் வருகின்ற மாதம் திரையில் வெளியாக உள்ளது எனத் தெரிவித்தார். இன்றைய சூழலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் இப்படம் பேசுகிறது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *