
நடிகர் சிம்புவின் அரசன் படத்தில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
நடிகர் சிம்புவின் அரசன் படத்தை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதியதாக இணைந்துள்ளார். இதையடுத்து, வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இதில், நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், விஜய் சேதுபதி இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 மற்றும் 2 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




