
Actress Taapsee Pannu : இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிறந்து, இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்துப் புகழ்பெற்று வரும் நடிகை தான் டாப்ஸி பண்ணு.
டெல்லியில் கடந்த 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி பிறந்த டாப்ஸி, தெலுங்கு திரைப்படம்மூலம் தான் தனது கலை உலக பயணத்தைத் துவங்கினார், இவருக்கு வயது 36.
கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கு மொழியில் அறிமுகமான டாப்ஸிக்கு, அடுத்த ஆண்டே தமிழில் கிடைத்த மாபெரும் வாய்ப்பு தான் வெற்றிமாறனின் “ஆடுகளம்” என்கின்ற திரைப்படம். அந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
ஆடுகளம் படத்திற்கு பிறகு பெரிய அளவில் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் ஹிந்தி மொழியில் அவர் முன்னணி நாயகியாகவே இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “அனபெல்லா சேதுபதி” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதே போல ராகவா லாரன்ஸ் அவர்களின் காஞ்சனா 2 திரைப்படமும், டாப்ஸிக்கு தமிழில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்றாகும்.


