AUS vs PAK 2nd Test: மழையால் ஆட்டம் பாதிப்பு!

ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.மழை தொடர்வதால் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது., அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 88 ரன்களும் ,அமீர் ஜமால் 82 ரன்களும் எடுத்தனர். .ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 6 ரன்களும் , உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர் , கவாஜா இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருந்தபோது டேவிட் வார்னர் 34 ரன்கள் எடுத்து ஆகா சல்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைதொடர்ந்து கவாஜா 47 ரன்களில் அமீர் ஜமால் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்வதால் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *