Nazriya Nazim: ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்.. ஸ்லீவ்லெஸ் போஸில் மனசை அள்ளும் நஸ்ரியா!

Advertisements

Actress Nazriya Nazim : திருவனந்தபுரத்தில் பிறந்து, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தான் நஸ்ரியா நசீம். குழந்தை நட்சத்திரமாக இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிறந்த நடிகை நஸ்ரியாவிற்கு வயது 29. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ச்சியாக மலையாள மொழியில் வெளியான ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா, 2013 ஆம் ஆண்டு மலையாள மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியான “நேரம்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தமிழில் இவர் நடிப்பில் வந்த “ராஜா ராணி”, “நய்யாண்டி” மற்றும் “வாயை மூடிப் பேசவும்” போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதியாகத் தமிழில் 2016ம் ஆண்டு வெளியான “திருமணம் என்னும் நிக்கா” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

கடந்த 2022ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நஸ்ரியா, கடந்த 2014ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் பாஹத் பாசில் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *