Keerthy Suresh:உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி.. கீர்த்தி சுரேஷால் பளபளவென்று மாறிய Filmfare Awards விழா!

Keerthy Suresh : தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழாவில் அசத்தலான உடை அணிந்து வந்து அனைவரையும் கிரங்கடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் பிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ், சின்னத்திரை நாடகங்களிலும் வெள்ளித்திரை படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி இப்பொது டாப் நாயகியாக அசத்தி வருகிறார். இவர் தேசிய விருது வென்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “மகாநதி” திரைப்படத்திற்காகவும், கடந்த 2023ம் ஆண்டு தெலுங்கில் வெளியான “தசரா” திரைப்படத்திற்காகவும் இருமுறை ஃபிலிம் ஃபேர் விருது வென்றவர் கீர்த்தி சுரேஷ்.

அது மட்டுமில்லாமல் தென்னிந்திய பன்னாட்டு திரைப்பட விருதுகளையும் இவர் பலமுறை வென்றிருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் வெளியான “கீதாஞ்சலி” என்கின்ற திரைப்படத்திற்கும், தமிழில் இவர் அறிமுகமான “இது என்ன மாயம்” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய படங்களுக்காகவும் இவர் விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அனைவரது கவனத்தையும் தற்போது வெகுவாக ஈர்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *