மீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா?

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் 10 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் போட்டியில், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.
இதில், 5 அணிகள் என நான்குப் பிரிவாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த முறையும் உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனைப் படைக்குமா? என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *