Advertisements

ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்த சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவுக்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இலட்ச ரூபாய் பரிசளித்துள்ளார்.
சென்னைப் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்துக்குச் சென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியைக் கபடி வீராங்கனை கார்த்திகா சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது அவரது சாதனையைப் பாராட்டிய பழனிச்சாமி ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
Advertisements

