Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பையின், வான்கடே மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்தப், போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடி 84 ரன்களைக் குவித்தார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் ஆரமித்துள்ளது.
Advertisements



