பஞ்சாபின்  அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் ஆகிய 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட்..!

பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து, பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில்,  காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது. தொடர்ந்து குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில், அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து பஞ்சாபின்  அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் ஆகிய 3 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் பஞ்சாபின் 3 மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *