இளைஞர்களை மிரட்டி ‘ஜிபே’ மூலம் பணம் பறித்தவர்கள் கைது!

சென்னை: 

சென்னை சூளைமேடு, பெரியார் பாதை பகுதியில் வசித்து வருபவர் சக்தி (21). இவர், சூளைமேடு, திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் தனது நண்பர்கள் அரவிந்த் மற்றும் கோகுல் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் சக்தி மற்றும் அவரது நண்பர்களை அடித்து, கத்தியைக்காட்டி மிரட்டி, அவர்களிட மிருந்த 2 செல்போன்கள் மற்றும் ஜிபே மூலம் ரூ.800-ஐ பறித்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் சக்தி புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றித் துப்புத் துலக்கினர். ஜிபே மூலம் பணம் பறிக்கப்பட்டதால் வங்கி அதிகாரிகள் மூலமும் விவரம் சேகரிக்கப்பட்டது.

பின்னர் இது தொடர்பாகச் சூளைமேடு நச்சிவாயபுரத்தைச் சேர்ந்த கிஷோர்குமார் (21) மற்றும் அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24), அப்துல்சமத் (28), கரண் என்ற கரண்குமார் (24), அபி என்ற அபிஷேக் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *