பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்தத சில நாட்களுக்குச் சென்னையை அடுத்துள்ள பம்பலில் நடந்த திமுக நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்: நாங்கள் எவ்வளவோ பிரதமரை நாங்கள் சந்தித்துள்ளோம். ஆனால், இவ்வளவு மட்டமாகப் பேசக்கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.