Accident: ஓட்டுனருக்கு வலிப்பு.. மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து!

Advertisements

நாட்டறம்பள்ளி அருகே அரசு விரைவு பேருந்து ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.இதில் 20 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சேலம் பகுதியிலியிந்து திருப்பதிக்கு அரசு விரைவு பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்தைச் சேலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.இந்தப் பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கேத்தாண்ட பட்டி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அரசுப் பேருந்து ஓட்டுனர் ரவி சந்திரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் அவர் ஓட்டுநரின் இருகையிலேயே மயங்கி விழுந்தார்.அதிவேகமாகச் சென்றிகொண்டுந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி அங்குள்ள மரங்களில் மோதி விபத்து ஏற்பட்டது.

அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துவிட்டு  பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில்   ஓட்டுநர் ரவிச்சந்திரன் மற்றும் பயணிகள் என 4 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்டு வாணியம்பாடி மற்றும்நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பள்ளத்தில் வரிசையாக மரங்கள் உள்ளதால் பேருந்து பள்ளத்தில் இறங்கியதும் கவிலாமல்  மரத்தில் மோதி நின்றது.இதனால் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த விபத்துகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *