ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் உருவெடுக்கும் பிரச்சைனை – என்ன செய்ய போகிறார் விஜய்..?

Advertisements

ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கில்,  தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பிற்கு, தடை விதித்த சென்னை உயிர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ்-பராசரன், பிரதீப்ராய் ஆகியோர் ஆஜராகினர். சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.

அப்போது, சினிமோட்டோகிராபி சட்டப்படியும் – Cinemotography laws based , 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் சென்சார் போர்டு தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், ஜனநாயகன் படத்தை 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், ரூபாய் 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என்றும், படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும் என்றும், மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது என்றும்  தெரிவித்தனர்.

மேலும், ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு, சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பும் பரஸ்பர வாதங்களை முன்வைத்தன. அதனைத் தொடர்ந்து, ஒரேநாளில் நடைமுறைகளை முடித்து உத்தரவு வழங்க வேண்டும் என தணிக்கை வாரியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *