
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், ஒரு பொன்னான எதிர்காலம் உண்டு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு, கடும் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் சிரியாவில், ஆப்பரேஷன் ஹாக்கி என்ற பெயரில் அமெரிக்க இராணுவ தாக்குலைத் தொடங்கியது. இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் கோட்டைகள் மீது மிகத் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருவதாகவும், பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டால், அந்நாட்டிற்கு ஒரு பொன்னான எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார். பின்னர், இந்த தாக்குதலுக்குச் சிரியா அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது என்றார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குத் தீய எண்ணம் கொண்ட அனைத்து பயங்கரவாதிகளுக்கும், இதற்கு முன் சந்தித்ததை விட மிகக் கடுமையான தாக்குதலைச் சந்திப்பீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


