ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 விற்பனை இந்தியாவில் தொடங்கியது!

Advertisements

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள நிலையில், மும்பை, தில்லி, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் ஏராளமானோர் வரிசையில் நின்று அதை வாங்கிச் சென்றுள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான ஐபோன் 17, ஐபோன் 19 புரோமேக்ஸ், ஏர்பாட்ஸ் 3, வாட்ச் சீரிஸ் 11, வாட்ச் SE3, வாட்ச் அல்ட்ரா 3 ஆகியவற்றை உலக அளவில் செப்டம்பர் ஒன்பதாம் நாள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ஐபோன் 17ஐ இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையொட்டி மும்பை பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஏராளமானோர் இன்று காலை முதல் வரிசையில் நின்றனர். ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் பாட்டுப் பாடிக் கண்ணாடிக் கதவைத் திறந்ததும் ஒவ்வொருவராக உள்ளே சென்று ஆப்பிள் ஐபோன் 17ஐ வாங்கிச் சென்றனர்.

இதேபோல் தில்லி சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்து ஆப்பிள் ஐபோன் 17ஐ வாங்கிச் சென்றனர்.இதேபோல் பெங்களூர் பீனிக்ஸ் மாலில் ஆப்பிள் ஐபோன்17ஐ வாங்குவதற்காக ஏராளமானோர் வரிசையில் காத்துநின்றனர்.

இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன்களை வாங்குவதை வசதிபடைத்தவர்கள் பெருமையாகக் கருதுவது குறிப்பிடத் தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *