
‘வானத்தை போல’ சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான, ஸ்வேதா கெல்கேவுக்கும் அவரின் காதலுக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில்… இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு எப்படி தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதே… அதே போல் சின்னத்திரை கதாநாயகிகளும் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், ‘வானத்தை போல’ சீரியலில்… முன்பு துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஸ்வேதா கெல்கே.
பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல்… கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகவெட்டுடன், துளசியாகவே மாறி ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் ஒரு கன்னட சீரியல் நடிகை என்றாலும், ‘வானத்தை போல’ சீரியல்… இவரை தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் சீரியல் ஹீரோயினாக மாற்றியது. இந்த சீரியலில் நடித்து வந்த இவர், திடீர் என இந்த தொடரை விட்டு விலகி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணெதிரே தோன்றினால்’ தொடரில் தற்போது நடித்து வருகிறார்.
27 வயதாகும் இவருக்கும், இவருடைய காதலர் மதுஷங்கர் கௌடா என்பவருக்கும், டிசம்பர் 10-ஆம் தேதி மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
கல்லூரியில் இவர் படித்து கொண்டிருக்கும் போதே மது ஷங்கரை காதலித்து வந்த நிலையில்… தற்போது இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
தற்போது தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

