Shah Rukh Khan: வைஷ்ணவி கோவிலில் ஷாருக் கான் சாமி தரிசனம்!

Advertisements

வைஷ்ணவி தேவி கோவிலில் இன்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரைசி மாவட்டம் கட்ராவில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் இன்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சாமி தரிசனம் செய்தார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ திரைப்படம் வருகின்ற 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. நேற்று டன்கி படத்தின் பாடல் ஒன்றை ஷாருக் கான் தனது சமுக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் இன்று அதிகாலை ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நடிகர் ஷாருக் கான் வைஷ்ணவி தேவி கோவிலில் இந்த ஆண்டில் சாமி தரிசனம் செய்வது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன் பதான் மற்றும் ஜவான் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பும் அவர் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஷாருக் கான் அதிகாலை வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதும் அவரை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *