Swaminarayan Temple:அமெரிக்காவில் ஹிந்து கோவில்மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்!

Advertisements

வாஷிங்டன்: நியூயார்க்கில் உள்ள சுவாமி நாராயண் கோவிலை விஷமிகள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஹிந்து கோவில் எனவும், உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பைப் பெற்றுள்ளது. நியூயார்க்கில் இந்தக் கோயிலைத் தெரியாத மக்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

விசாரணை
இந்நிலையில், கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள்மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.

கொடூரமான செயலுக்குக் காரணமானவர்கள்மீது உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சமீப காலமாக நடந்து ஹிந்து கோவில்கள்மீது நடந்து வரும் தாக்குதல்குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவில், கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களின் அக்கிரம செயல்பாடுகள் பதிவாகியுள்ளன.

அறக்கட்டளை கண்டனம்
அமெரிக்காவின் ஸ்வாமி நாராயண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுக்லா கூறியதாவது: இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள்குறித்து விசாரிக்க வேண்டும். ஹிந்து கோவிலைத் தாக்குபவர்களின் கோழைத்தனத்தைப் புரிந்துகொள்வது கடினம்’ என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *