மாஸ் காட்டும் சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசர்.. எப்படி இருக்கிறது?

Advertisements

சூர்யாவின் 50-வது பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பு படத்தின் நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.இன்று சூர்யாவின் 50-வது பிறந்த நாளாகும். இதையடுத்து இன்றைய தினம் டீசர் வெளியாக இருக்கிறது என்பதை போஸ்டர் மூலமாக படக்குழு தெரிவித்திருந்தது

அதன்படி, படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் முதல் விஷயம் சூர்யாவின் தோற்றம். அவரின் தோற்றமே படம் பக்கா மாஸ் என்டெர்டெயினர் என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப முறுக்கு மீசை, வெறித்தனமான ஆக்டிங் என டீசர் முழுக்க சூர்யாவே நிறைந்திருக்கிறார். மற்ற கேரக்டர்கள் யாரும் பெரிதாகக் காட்டப்படவில்லை. சூர்யா வக்கீலாக நடித்துள்ளார். டீசரில் சில வசனங்களே இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொன்றும் ஷார்ப்பாக இருக்கிறது.

அதோடு ஆக்சன் காட்சிகளும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அடுத்தது சாய் அபியங்கரின் பின்னணி இசை. இரைச்சல் இல்லாத அதேநேரம் முணுமுணுக்கும்படியான பின்னணி இசை வெளிப்பட்டுள்ளது.இந்நிலையில் , ஜெய் பீம் திரைப்படத்தில் சமூக கருத்துக்களை உணர்த்தியதன் மூலமாக இட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்திருக்கிறது . அடுத்த படியாக கருப்பு திரைப்படத்தின் டீசரிலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக்கேட்டு நியாயம் வாங்கிக் கொடுக்கும் பின்னணியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *