தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்..!

Advertisements

தனுஷ் நடிக்கும் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் நடிக்கும் ’ஜன நாயகன்’ படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். இந்தப் படத்தில், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘குபேரா’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். விரைவில் ‘இட்லி கடை’ படத்துக்கான முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *