Advertisements

தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
சென்னையில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகக் கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாகத் தக்க வைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நான்காவது நாளாக நடைபெறும் நிலையில், முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.
Advertisements



