ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வருகிறது சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’!

Advertisements

பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற புதிய திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற புதிய படத்தில்  நடித்துள்ளார்.

 

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இசைமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இதில், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தொடர்பான போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் சூர்யா ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *