Delhi : பசுமை வெடிகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை காலை 6 முதல் 7 வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் தீபாவளி திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளின்போது பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பசுமை வெடிகளை வெடிப்பதற்கு மட்டும் மக்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அதேநேரத்தில், வெளிப்பகுதியில் இருந்து டெல்லிக்கு பட்டாசுகள் கொண்டுவர அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதையடுத்து அரியானா மாநிலம் குருகிராமத்தில் மக்கள் பசுமை வெடிகளை வாங்குவதற்கு ஆர்வமாகக் கடைகளில் குவிந்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்றபடி ஆர்வத்துடன் வெடிகளை வாங்கிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *