தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை!

Advertisements

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400, செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240, மற்றும் நேற்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.64,280-க்கு விற்பனையாகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று நான்காவது நாளாகத் தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,070-க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,560-க்கும் விற்பனையாகிறது. நாள்தோறும் உயர்ந்து வரும் தங்கம் விலையால் மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த திங்கட்கிழமையிலிருந்து இன்று வரை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *