Tik Tok ilakkiya : டிக் டாக் இலக்கியா தற்கொலை செய்ய முடிவெடுத்தாரா?.. உண்மை என்ன?

Advertisements

இன்றைய இளம் பெண்கள் பேஸ் புக், இன்ஸ்டா, யூடியூப்களில் விதவிதமாக வீடியோக்கள் போட்டுப் பிரபலம் அடைகின்றனர். அதை வைத்துப் பாலோவர்களை சாம்பாதித்து  பணமும் பார்க்கின்றனர். இதில் சிலர் வரம்பு மீறி வீடியோக்கள் போடுபவர்களும் உண்டு. அப்படிபட்டவர்களில் இலக்கியாவும் ஒருவர். அவர் தற்கொலை முயற்சி செய்தார்  தாற்கான காரணம் என்ன என்பதை இந்தச் செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்……
6 வருடம் தன்னுடன் இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏமாற்றிவிட்டதாகக் கூறி மதுபோதையில், பிரபல டிக்டாக்  செயலிமூலம் புகழ் பெற்ற இலக்கியா அதிகளவில், சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டு  தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலிமூலம் இளைஞர் முதல் வயதானவர்கள் என லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன் வசப்படுத்தியவர் தான் இலக்கியா.

இவர் தனது ஆபாச நடனம்மூலம் பிரபலமானார். டிக்டாக் செயலியை மத்திய அரசுத் தடை செய்தது. அதன் பிறகு, இப்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் திசை திருப்பிய இலக்கியா, தனது வீடியோக்களைப் போட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது இலக்கியாவை 16 லட்சம் பாலோவர்கள் இன்றும் வரை பின் தொடர்ந்து வருகின்றனர். இலக்கியாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்ததால்  காரத்தினால் அவர் ஜாம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்று சொல்லப்படுகிறது.
அப்படி இருந்த போதிலும்,  இலக்கியா தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டா பக்கத்தில் மாசான  சினிமா பாடல்களுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து வருகிறார் .  சினிமாவில் வாய்ப்புகள் அதிகளவில் இலக்கியாவுக்கு வந்ததால், இப்போது பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இலக்கியா ஜூலை 24ம் தேதி முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்தார். அதில் என்னுடைய சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம் என்று தெரிவித்து இருந்தார்.

அதோடு என்னை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டார் திலீப் சுப்பராயன்.. (அது மட்டுமா ? நான் தாலி கட்டமா ஆறு வருசமா அவன்கூட இருந்ததேன்.}  அப்போது தான் நிறைய பொண்ணுங்க கூட, அவருக்குப் பழக்கம் இருந்ததைதையே தெரிந்துகொண்டேன். அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு என்னைக் கடுமையாகத் தாக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.   நானும் அதையெல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால முடியவில்லை. இதற்குப் பின்பும்  நான் ஸ்டேட்டஸ் போட்டா காரணத்தினால்,  சரமாரியாகத் தக்கினார்.

எனக்கு ஏதாவது ஒன்றும் ஆனாலும் கூட,  இவர் மட்டும் தான் பொறுப்பு.  இதற்க்கு பின்பு  வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை, என்றும் நான்இறந்தால்  தான் எல்லாரும் நன்றாக இருப்பார்கள் என்று  பதிவு செய்து, 15 மாத்திரைகள் புகைப்படத்தை வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
இதைப் பார்த்த அவரது தீவிர ரசிகர்களில் மற்றும் உறவினர்கள் இலக்கியாவுக்கு தொலைபேசியில்  தொடர்பு கொண்டு இருக்கின்றார்.  ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனே அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார் இலக்கியா. .

அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து  மருத்துவர்கள்  இலக்கியாவிற்கு சிகிச்சை அளித்தனர். அப்போது,  இலக்கியா உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.மேலும் அவர் அதிகளவில் மது அருந்தி இருந்ததால் உடனே மேல் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்ற, அரசு மருத்துவர்கள்  பரிந்துரை செய்தனர். அப்போது உடன் வந்த அவரது நண்பர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இலக்கியாவை அனுமதித்தார். அங்குத் தீவிர சிகிச்சைக்குப் பின்னர்  உயிர் பிழைத்தார்.

பின்னர் மருத்துவமனை தகவலின் படி மாங்காடு போலீசார் சம்பவம்குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, டிக்டாக் பிரபலம் இலக்கியா தனது ஆண் நண்பரான ஸ்டண்ட் மாஸ்டரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 6 ஆண்டுகள் பழகி வந்துள்ளார். ஆனால் இலக்கியா சினிமா படப்பிடிப்பு காரணமாக அடிக்கடி துபாய், மலேசியா, சிங்கப்பூர் சென்ற நேரத்தில் அவரது ஆண் நண்பர் பல பெண்களுடன் பழக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது இலக்கியா கவனத்திற்கு தெரிய வரவே , இதுகுறித்து அவரது ஆண் நண்பரான ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே  கடும்  ஏற்பட்டது.  இதன் பின்புதான் இலக்கியா தற்கொலை முயற்சிக்குச் சென்றதாக  விசாரணையின் மூலம் தெரியவந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். இதன் பின்பு  போலீசார் இலக்கியா மற்றும் அவரது ஆண் நண்பரான ஸ்டண்ட் மாஸ்டரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.டிக்டாக் பிரபலம் இலக்கியா, தற்கொலை முயற்சிக்கு முன்பு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், எனக்கு ஏதாவது ஆனதுனா அதற்கு நீ மட்டும் தான் பொறுப்பு என்று இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் .

இதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அளித்த விளக்கத்தில், இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார்…  என்மீதான காழ்ப்புணர்ச்சியில் இதை யாரோ செய்கிறார்கள் என்று இந்த விவகாரத்தைச் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். நான் வேட்டு விபத்து பாதிப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையே இலக்கியா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவன் சொல்வது அனைத்தும் பொய்யான  தகவல் எனப் பதிவு செய்துள்ளார். டிக்டாக் பிரபலம் இலக்கியா அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதுவுமே அளவுக்கு மிஞ்சனால் விஷம்தான். இது இன்றை இளம் பெண்களுக்கு இது புரியாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை  திசை தெரியாமல் போகிறது. அவர்களில் ஒருவர் தான் டிக்டாக் இலக்கியா.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *